முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று, பாலி  ஆற்றில்  மணல் ஏற்றிக்கொண்டு திரும்பிச்செல்ல முற்பட்ட வேளையில் மேற்படி உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் உழவு இயந்திரச் சாரதியான மூன்றாம் திட்டம், கல்விளான் , துணுக்காயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.