அமெரிக்காவில் அடுத்த ஆண்டு  நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொணால்ட் ட்ரம்ப் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

 2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என  தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிடும் நிறுவனம் ஒன்றால் இக் கேள்வி கேட்கப்பட்டது.

இந்நிலையில்  இணையத்தளம் ஊடாக கேட்கப்பட்ட இக்கேள்விக்கு 52 சதவீதமானோர் பேர் ட்ரம்பிற்கு எதிராக வாக்களிக்கபோவதாக தெரிவித்துள்ளனர்.

42 சதவீதமானோர் ட்ரம்பிற்கு வாக்களிக்கபோவதாக தெரிவித்துள்ளனர்.

அத்தோடு 6 சதவீத வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்கை செலுத்த வேண்டும் என்று நாங்கள் தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும் நடைபெறவிருக்கும் 2020  ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ வால்ஷ் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.