பிரித்­தா­னிய தொழிற்­கட்சித் தலைவர் ஜெரேமி கொர்பைன்  பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஆத­ர­வ­ளிக்­கா­ததன் மூலம் ஜன­நா­ய­கத்தை கோழைத்­த­ன­மான முறையில்  அவ­தூறு செய்­துள்­ள­தாக  பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

 முன்­கூட்­டியே தேர்­தலை நடத்­து­வ­தற்­கான போரிஸ் ஜோன்­ஸனின் திட்­டத்­துக்கு அந்­நாட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை முட்­டுக்­கட்டை போட்­டி­ருந்­தனர்.

 அந்­நாட்டின் நிழல் அதி­ப­ரான ஜோன் மக்­டொன்னல் இது குறித்து தெரி­விக்­கையில், தொழிற்­கட்சி முன்­கூட்­டி­யே­ தேர்­தலை நடத்து­வ­தற்கு விருப்பம் கொண்­டுள்­ள­தா­கவும்  ஆனால்  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வெளியே­று­வதை தடுப்­ப­தற்கு அது முன்­னு­ரிமை கொடுப்­ப­தா­கவும் கூறினார்.

அத்­துடன் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான தினம் குறித்தும்  கட்­சிக்குள் வேறு­பா­டுகள் காணப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்தார்.

 அதனால் தலை­மைத்­து­வ­மா­னது எதனைச் செய்­வது என்­பது தொடர்பில் சட்­ட­நி­பு­ணர்­க­ளு­டனும்  ஏனைய எதிர்க்­கட்­சி­க­ளுடனும் கலந்­து­ரை­யா­டி­வ­ரு­வ­தாக  அவர் கூறினார்.

விரை­வாக அல்­லாது பின்­ன­ரான ஒரு தேர்­த­லையே தான்  விரும்­பு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா உடன்­ப­டிக்­கை­யின்றி வில­கு­வதை தடுக்கும் சட்­ட­மூ­ல­மொன்று இன்று வெள்ளிக்­கி­ழமை பிர­புக்கள் சபையில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே ஜோன் மக்­டொன்­னலின் விமர்­சனம் வெளியா­கி­யுள்­ளது.

அந்த சட்­ட­மூ­லத்­துக்கு  சர­ண­டை­வது பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான பிறிக்ஸிட் செயற்­கி­ரமம் தொடர்பில் மேலும் குழப்­பமும் தாம­தமும் ஏற்­ப­டவே வழி­வகை செய்யும் என பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் எச்­ச­ரித்­துள்ளார்.

அந்த சட்­ட­மூலம்  பிரித்­தா­னிய வர­லாற்றில் மிகவும் பெரிய ஜன­நா­யக ரீதி­யான வாக்­கெ­டுப்­பாக கரு­தப்­படும் 2016 ஆம் ஆண்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை மாற்­று­வ­தாக உள்­ள­தாக  பிர­த­மரின் அலு­வ­லகம் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

அதே­ச­மயம்  தொழிற்­கட்சி மற்றும் ஏனைய எதிர்க்­கட்­சி­களைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள்  எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி  பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கை எதுவுமின்றி  விலகும் அதேவேளை  பொதுத் தேர்தலை நடத்துவதற்கு  போரிஸ் ஜோன்ஸனால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என  தெரிவிக்கின்றனர்.