நுவரேலியா நகரத்திலுள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளம் காண்பதற்காக விஷேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக முச்சக்கரவண்டிகளுக்கு விஷேட ஸ்ரிக்கரை வழங்குவதற்கு நுவரேலியா நாகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இந்த முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காணக்கூடிய வகையில் இந்த ஸ்ரிக்கர்கள் காட்சிப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த முச்சக்கர வண்டிகள் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பொலிஸாருக்கு அல்லது நகர சபைக்கு இதன் மூலம் அறிவிக்க முடியும்.  முக்கியமான இடத்தில் ஸ்ரிக்கர்  ஒட்டப்படுவதுடன் தொலைபேசி இலக்கம் மற்றும் சாரதியின் பெயரருடன் கூடிய புகைப்படமும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

நுரரேலியா நகரத்திலுள்ள முச்சக்கரவண்டிகள் சிலவற்றிற்கு நுவரேலியா நகரமுதல்வர் சந்தனலால் கருணாரத்ன, நகர ஆணையாளர் உள்ளிட்டோர் தலைமையில் முச்சக்கரவண்டிகள் சிலவற்றிற்கு இந்த ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.