மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை -  மத்துகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவ்வாறு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் ரக வாகனம் ஒன்றும்  மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

அத்தோடு விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்  உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்களில் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்தோடு சம்பவத்தில் உயிரிழந்த நபர் 40 வயதுடைய மீகஹதென்ன, கபுவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.