செலான் வங்கியானது 2016 மார்ச் 31ஆம் திகதியன்று முடிவடைந்த 3 மாதங்களில் வருமான வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 720 மில்லியனை பெற்று, 2015ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெற்றுக் கொண்ட ரூபா 691 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தை விட 4% அதிகரிப்பொன்றை பதிவு செய்ததன் மூலம் உறுதிமிக்க காலாண்டு செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.
2016 மார்ச் 31ஆம் திகதியன்று முடிவடைந்த 3 மாதங்களுக்கான தேறிய வட்டி வருமானம் ரூபா 2,805 மில்லியனில் இருந்து ரூபா 2,939 மில்லியனாக, 4.8% இனால் அதிகரித்தது. 2016 இன் முதலாம் காலாண்டில் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானமானது ரூபா 562 மில்லியனில் இருந்து ரூபா 695 மில்லியனாக 23.6% இனால் அதிகரித்துள்ளது. கடந்த சில வருடங்களாக செலான் வங்கி அடையப் பெற்ற திடமான வளர்ச்சிப் போக்கின் ஒன்றுதிரண்ட தன்மையை வெளிப்படுத்துவதாக இது காணப்படுகின்றது.
வர்த்தக நடவடிக்கையில் இருந்து கிடைக்கும் தேறிய ஆதாயங்கள் அதேபோல், நிதிக் கருவிகள் மற்றும் அந்நிய செலாவணியின் மீது கிடைக்கப் பெறும் ஆதாயங்கள் மற்றும் ஏனைய வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதான வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது 2015 இல் ரூபா 401 மில்லியனில் இருந்து 2016 இன் முதலாம் காலாண்டில் 117% இனால் குறைவடைந்ததன் மூலம் ரூபா 68 மில்லியன் தேறிய நட்டத்தை பதிவு செய்தது. வட்டி வீதங்களில் மேல்நோக்கிய நகர்வொன்று காணப்பட்டதன் காரணமாக உருவான அரச பிணையங்களின் மீதான சந்தை விலைச் சீராக்க நட்டங்களின் விளைவாக இவ்வாறு தொழிற்பாட்டு வருமானம் வீழ்ச்சியடைந்தது.
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இக் காலப்பகுதியில் செலான் வங்கி கிரயக் கட்டுப்பாட்டிலும் குறிப்பிடத்தக்க கவனத்தை செலுத்தியது. ரூபா 2,129 மில்லியனாக காணப்பட்ட மொத்தச் செலவிலான அதிகரிப்பை, 2016 இன் முதலாம் காலாண்டில் ரூபா 2,273 மில்லியனுக்கு கொண்டுவந்து 6.8% ஆக கட்டுப்படுத்தியதன் மூலம் இது வெளிப்படையாகவே நிரூபணமாகியுள்ளது.
ரூபா 193,103 மில்லியனாக காணப்பட்ட தேறிய முற்பணங்களின் பெறுமதியானது, 2016 இன் முதலாம் காலாண்டில் ரூபா 201,350 மில்லியனாக அதிகரித்த நிலையில், செலான் வங்கியானது 4.27% தேறிய கடன் வளர்ச்சியைப் பதிவு செய்தது.
2016 இன் முதலாம் காலாண்டு காலப்பகுதியில், வங்கி தனது வைப்புத்தளத்தை ரூபா 224,525 மில்லியனில் இருந்து ரூபா 225,445 மில்லியனாக வளர்ச்சியடையச் செய்திருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM