காஷ்மீர் தொடர்பாக ஆட்சேபகரமான கருத்துகள் டுவிட்டர் மூலம் பரப்பப்படுவதற்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து 333 பாகிஸ்தானியப் பயனர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் பற்றி எழுதப்பட்டதற்காக 333 டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் காஷ்மீர் பற்றி கருத்து வெளியிட்டமைக்காக சுமார் 200 டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட டுவிட்டர் கணக்குகளில் பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ டுவிட்டின் ரசிகர்களின் கணக்குகளே அதிகம் எனக் கூறப்படுகிறது.

எனினும் டுவிட்டர் பதிவுகளை நிறுத்திவைத்தல் மற்றும் டுவிட்டர் கணக்குகளை முடக்குவதில் டுவிட்டர் நிர்வாகம் பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த அணுகுமுறை ஒருதலைப்பட்சமானது ஆகும். காஷ்மீர் தொடர்பாக கருத்து வெளியிடுவதைக் காரணம் காட்டி டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டால் உடனடியாக புகார் அளிக்கும்படி பாகிஸ்தான் சமூக ஊடகப் பயனர்களிடமும் வலியுறுத்தியுள்ளது.