இலங்கை ஆட்பதிவு திணைக்களம் நாளைய தினம் காலியில் தனது மாகாண அலுவலகத்தை திறக்கவுள்ளது.

சுமார் 450 மில்லியன் டொலர் செலவில் குறித்த கட்டடமானது காலியில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஒரு நாளுக்கு ஆயிரம் தேசிய அடையாள அட்டைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.