சஜித்தை அடுத்த ஜனாதிபதியாக்கியே தீருவோம்  குருநாகல் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம் 

Published By: R. Kalaichelvan

05 Sep, 2019 | 06:56 PM
image

(எம்.மனோசித்ரா)

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக அபேசிங்கவினால் குருணாகல் மாவட்டத்தின் சத்தியவாதி மைதானத்தில் இன்று  ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரமேதாசவை வரவேற்கும் பொது மக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக் கூட்டத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா , உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துலவல, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான துஷார இந்துநில், இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

எனினும் பதுளை மற்றும் மாத்தளையில் இதே போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த முக்கிய உறுப்பினர்களான அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இன்று மாலை 4 மணியளவில் இக் கூட்டம் ஆரம்பமாகியிருந்த போதிலும் 5.30 மணியளவிலேயே அமைச்சர் சஜித் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். அத்தோடு மைதானத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததோடு, சஜித் மேடைக்கு வருகை தந்த போது கடித உரைகளையும் பலர் கையளிக்க முற்பட்டனர். 

மேலும் 1326 என்ற அவசர தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டதோடு அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டது. அண்மையில் மாத்தளையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான பதாதைகளை ஏந்தியவாறு ' அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச ' என்று கோஷம் எழுப்பியவாறிருந்தனர். கூட்டத்தில் பங்குபற்றியிருந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் சஜித் பிரேமதாசவினுடைய உரையைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30