அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் இருகின்ற போதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்னமும் பலம் பொறுந்தியதாகவே விளங்குகின்றது என்றும் அதன் அதிகாரங்களை முறையாக பயன்படுத்தி நாட்டுக்கு வழிமையான தலைமைத்துவத்தை வழங்க கூடிய ஒருவரையே தாங்கள் வேட்பாளராக தெரிவு செய்திருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

  

தேயிலை , இறப்பர் சிறு பயிர்ச்செய்கையாளர்கள், ஏற்றுமதியாளர்களுடனான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனான  சந்திப்பு கொழும்பு இலங்கை கண்காட்சி மகாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போது அதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய  இதனை தெரிவித்தார்.

 அரசியலமைப்பினால் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் கூட அதனால் துவண்டுவிடாமல் அர்ப்பணிப்பும் துணிச்சலும் கொண்ட ஒருவரால் நாட்டை முன்னோக்கி வழி நடத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது ;

எமது ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ நாட்டை அபிவிருத்தி செய்வதில் தனக்கு இருக்கும் ஆற்றலை ஏற்கனவே வெளிக்காட்டியிருக்கிறார். 

பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய  காலத்தில் அவர் செய்தவற்றை அடிப்படையாக கொண்டு அவருடைய ஆற்றல்களை மதிப்பீடு செய்ய முடியும். அதனால் மாறுப்பட்ட சூழ்நிலைகளிலும் கூட நாட்டை அபிவிருத்தி செய்வதில்  அவருக்கு இருக்க கூடிய ஆற்றல் குறித்து  கவலைப்பட வேண்டியதில்லை. 

நாட்டை சுவீட்சத்துக்கு வழிநடத்தக்  கூடிய ஆற்றலுள்ள தலைவர் ஒருவரே எமக்கு தேவை. அவ்வாறான ஆற்றல் கொண்ட ஒருவரே எமது வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ. 

எனது அரசாங்கத்தில்  பாதுகாப்பு செயலாளராக இருந்து அவர் தனது ஆற்றல்களை  வெளிக்காட்டியிருக்கிறார் என அவர் இதன்போது தெரவித்தார்.