(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான பிரேரணையை மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியும், வாக்கெடுப்பை நடத்த தயாரில்லை என அரசாங்கமும் சபையில் கடும் வாத பிரதிவாதத்தில் ஈடுபட்டனர்.  

ஆளும் தரப்பில் பெரும்பான்மை இல்லாத நிலையில் நீண்ட நேர மோதலின் பின்னர் சபாநாயகரின் தலையீட்டால் வாக்கெடுப்பை நடத்தாது அரசாங்கம் தப்பித்தது. 

எனினும் சபாநாயகர் அரசாங்கம் கொண்டுவரும் சட்டமூலம் ஒன்று குறித்து இன்னொரு நாளில் விவாதத்திருக்கு எடுத்து வாக்கெடுப்பும் நடத்தும் அதிகாரம் சபை முதல்வருக்கு உள்ளது. அதற்கமைய இன்னொரு நாளில் இந்த விவாதம் முன்னெடுக்கப்படும் என அறிவித்து சபையை ஒத்திவைத்தார்.