(நா.தினுஷா)

மக்களின் வரிப்பணத்திலிருந்தே நாட்டின் சகல நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் நிதி செலவிடுகிறது. நிதி செலவுகள் குறித்தும் இலஞ்ச ஊழல்கள் தொடர்பிலும் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கும் அதிகாரம் பொது மக்களுக்கு இருக்கிறது.

ஆகவே மக்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களை கேள்விக்குட்படுத்த வேண்டும் என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகரும் பிரதமர் அலுவலகம் அபிவிருத்தி தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளருமான சுதர்ஷன குணவர்தன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ; 

அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கென்று பாரியளவு நிதி செலவிடகிறது. 

ஆனால் இந்த அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் மக்களுக்கு போதிய தெளிவுப்படுத்தல்கள் வழங்கப்பட வில்லை. இவ்வாறு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் குறித்து மக்களை தெளிவுப்படுத்துவதற்கான பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுவதில்லை. 

இந்த  பிரசார பணிகள் மக்கள் மத்தியில் முறையாக கொண்டு சேர்க்கப்பட வேண்டுமாயின் அதற்கு அது குறித்து அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் அவர் இதன்போது தெரிவித்தார்.