(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களின் போது தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயத்தில் காயமடைந்த 81 பேரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. 

இதன்போது காயமடைந்ததாக கூறப்படும் மேலும் 7 பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், இவ்வாறு வாக்கு மூலங்களை வழங்காமல் இருப்பவர்கள் 011-2392900 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு வாக்கு மூலங்களை வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.