ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் சதத்தைப் பெற்ற வீரர் என்ற வர­லாற்று சாத­னையை ரஹமத் ஷா நிகழ்த்தியுள்ளார்.

தற்­போது நடை­பெற்­று­வரும் பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியின் போதே ரஹ்மத் ஷா ஆப்­கா­னிஸ்­தானின் கன்னிச் சதத்தைப் பெற்­றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக டெஸ்ட் அரங்கில் அடி­யெ­டுத்து வைத்த ஆப்­கா­னிஸ்தான் அணி தனது முதல் போட்­டியில் இந்­திய அணியை எதிர்த்­தா­டி­யது.

அதன்­பி­றகு தனது இரண்­டா­வது போட்­டி­யாக தற்­போது பங்­க­ளாதேஷ் அணி­யுடன் ஆப்­கா­னிஸ்தான் விளை­யாடி வரு­கின்­றது.

பங்­க­ளா­தேஷில் இன்று ஆரம்­ப­மான இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற ஆப்­கா­னிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. 

இதில் ஆரம்பத் துடுப்­பாட்­ட­வீ­ரர்கள் இருவரும் சொற்ப ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழக்க ரஹமத் ஷா இரண்­டா­வது விக்­கெட்­டுக்கு கள­மி­றங்கி அபா­ர­மாக துடுப்­பெ­டுத்­தாடி 187 பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்து 10 பவுண்­ட­ரிகள் மற்றும் 2 சிக்­ஸர்­க­ளுடன் 102 ஓட்­டங்­களைப் பெற்று, சதம் பெற்ற ஆப்கானிஸ்தானின் முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார் ரஹ்மத் ஷா.