"அடுத்த நொடியும் மனித வாழ்வில் நிரந்தரமில்லை": மேடையில் பாடிய பாடகர் சரிந்து விழுந்து மரணம்

Published By: Digital Desk 8

05 Sep, 2019 | 04:57 PM
image

மனிதனுக்கு மரணம் என்பது எந்த நேரத்தில் நிகழும் என்பது தெரியாது என்பதற்கு சான்றாக கர்நாடகாவில் ஒரு விடயம் நடந்தேறியுள்ளது. 



 

இந்தியாவில், கர்நாடகாவில் மேடை பாடகர் ஒருவருக்கு நேர்ந்த மரணம், நினைத்தாலே நெஞ்சத்தை பதற வைப்பதாக உள்ளது. கர்நாடகாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளில் ஒன்று கொங்கணி. இந்த மொழியில் அருமையான பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர், ஜெர்ரி போஜ்ஜோடி. 51 வயததகிறது. 

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆங்காங்கு இந்த பண்டிகையையொட்டி இசைக் கச்சேரிகள் நடைபெறும்.இந்நிலையில், மங்களூர் அருகே, பெஜாய் பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு, நடைபெற்ற இசைக் கச்சேரியில், ஜெர்ரி போஜ்ஜோடி பங்கேற்று பாடிக் கொண்டிருந்தார். இசை ஒரு பக்கம், இசைக்க, மைக்கை பிடித்து, ரொம்பவே ஆர்வமாக பாடிக் கொண்டிருந்தார் ஜெர்ரி. எந்த ஒரு சலனமும் இன்றி, உற்சாகமாகத்தான் பாடிக்கொண்டிருந்தார், ஜெர்ரி. ஆனால், ஒரு கட்டத்தில், சில விநாடிகள் மட்டும் அவரது கண்கள் சொக்கிப்போயின. திடீரென, அப்படியே முன்நோக்கி சரிந்தார். மேடையில் பாதி உடலும், கீழே பாதி உடலுமாக அப்படியே விழுந்து கிடந்தார், ஜெர்ரி.

கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்த, ரசிகர்கள் அப்படியே அதிர்ச்சியாகி, அலறியடித்தபடி, ஜெர்ரியை நோக்கி ஓடிச் சென்று அவரை தூக்கி வைத்து, தட்டி எழுப்பி பார்த்தனர். ஆனால் ஜெர்ரியிடம் இருந்து எந்த ஒரு அசைவுமே வரவில்லை. அப்போதுதான், ஜெர்ரி இறந்து போனது தெரியவந்தது. இந்த இசைக் கச்சேரியை வீடியோவாக பதிவு செய்துகொண்டு இருந்தனர் ரசிகர்கள். அந்த வீடியோவில், இந்த இறுதிக் காட்சி பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க பிரஜையான இரண்டு வயது சிறுமியையும்...

2025-04-28 12:23:35
news-image

காலக்கெடு நிறைவு: கண்ணீருடன் விடைபெற்று அட்டாரி...

2025-04-28 10:45:20
news-image

ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம் :...

2025-04-28 08:59:10
news-image

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள்...

2025-04-27 13:17:23
news-image

கனடாவின் வான்கூவரில் வாகனத்தினால் பொதுமக்கள் மீதுமோதிய...

2025-04-27 10:48:18
news-image

பஹல்காம் தாக்குதல்; ராணுவம் மூலம் பதிலடி...

2025-04-27 10:35:30
news-image

இது 1000 வருட பிரச்னை; இந்தியா-பாகிஸ்தான்...

2025-04-27 10:24:03
news-image

ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம் :...

2025-04-27 10:14:40
news-image

ஈரானில் பாரிய வெடிப்பு சம்பவம் :...

2025-04-26 17:59:11
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் திருவுடல் நல்லடக்கம்

2025-04-26 17:42:37
news-image

பாகிஸ்தான் விமான நிலையத்தில் தீ விபத்து

2025-04-26 22:50:47
news-image

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின்...

2025-04-26 14:50:30