விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பிறகு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி கவர்ச்சி நடிகை என்று பெயரெடுத்தவர். 

இயக்குநர் சுந்தர் சி இயக்கிய படங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று கவர்ச்சி காட்டி ரசிகர்களை சம்பாதித்த நடிகை கிரண்,  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் கவர்ச்சி நடிகையாகும் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் ‘முத்தின கத்திரிக்கா’ என்ற திரைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

தற்போது சந்தானம் நடிப்பில் தயாராகி, கிடப்பில் இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் அந்த படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை கிரண் இணையத் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்காக அண்மையில் போட்டோ ஷூட் நடத்தி, தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணைய தொடர் தயாரிப்பாளருக்கு வழங்கி வருகிறாராம் நடிகை. அத்துடன் தன்னுடைய இணையப் பக்கத்திலும் பதிவேற்றி, இணைய ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார் நடிகை கிரண்.