க்ரிஸ்ப்ரோ ஊழியர் நலன்புரிச் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் க்ரிஸ்ப்ரோ தினம் இம்முறையும் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி அவர்களது கம்பளை பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது. ஊழியர்களின் மகிழச்சியை மெருகூட்டும் நோக்கில் சர்வதேச தொழிலாளர் தினத்துடன் இணைந்ததாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் க்ரிஸ்ப்ரோ குழும நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 900 ஊழியர்கள் கலந்துகொண்டதுடன், அதன் தலைவர் மற்றும் முகாமைப் பணிப்பாளர் மொஹமட் இம்தியாஸ் தலைமை தாங்கினார்.
க்ரிஸ்ப்ரோ தின நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள் மத்தியில் நால்வருக்கு நான்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டதுடன், இதற்கான தெரிவு க்ரிஸ்ப்ரோ நலன்புரிச் சங்கத்தின் விசேட தெரிவுக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் அதிசிறந்த ஊழியர்கள் 9 பேருக்கு தமது வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன. 2013ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 15 புதிய வீடுகள் வழங்கப்பட்டிருப்பதுடன், 22 வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
43 வருட கால வரலாற்றைக்கொண்ட க்ரிஸ்ப்ரோ குழும நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக நீண்டகாலம் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் 5, 10, 20, மற்றும் 25 வருடங்கள் என தத்தமது சேவைக்காலத்தை கருத்திற்கொண்டு விருதுகளும் சான்றிதழ்களும் மேலும் பல பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்வாறு மொத்தமாக 61 ஊழியர்கள் சேவைக்காலத்தின் அடிப்படையில் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் நிறைவேற்றுத் தரமல்லாத சேவைக் குழாத்தைச் சேர்ந்த சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 15 பேருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நிறு
வனம் அவர்களது சகல செலவுகளையும் ஏற்று, உள் நாட்டு சுற்றுலாக்கள் சென்றுவருவதற்கான வசதிகளும் மற்றும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM