(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அரசாங்கத்தினுள் வைத்து பாதுகாக்கும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 

குறிப்பாக ரிஷாத் பதியுதீன் முழுமையாக குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுகின்றார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தில் இருந்தும் விடுவிக்கப்படுவது நாட்டு மக்கள் எவருக்கும் சகிக்க முடியாத விடயமாகவே மாறியுள்ளது. இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு குற்றவாளிகளை பாதுகாத்து அவர்களுக்காக அரசாங்கம் துனைநிற்பது மோசமான செயலாகும். 

இன்று ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேப்பாளர் போட்டியில் முட்டி மோதிக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலாக இருக்க முடியும், அமைச்சர் சஜிதாக இருக்க முடியும், அல்லது சபாநாயகர் கரு ஜெயசூரியவாககூட இருக்க முடியும். இவர்களில் யாராக இருந்தாலும் பரவாயில்லை.

ஆனால் இவர்கள் மூவரிடமும் கேட்கிறோம். ரிஷாத் பதியூதினின்  ஒத்துழைப்பை நீங்கள் தேர்தலில் பெறுவீர்களா என்பதை நட்டு மக்களிடம் கூறுங்கள். இந்த வாக்குறுதியின் மூலமே இந்த நாட்டு மக்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை வரும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.