என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் தொழில்முயற்சிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 90 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

இம்முறை இந்த நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் ஆரம்பமாகவிருப்பதுவும் குறிப்பிடதக்கது. என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்றாவது கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னரே நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை கண்காட்சியின் மூலம் பத்தாயிரம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்க எதிர்ப்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.