(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சீனாவின் துறைமுக நகருக்காக இணைத்துக்கொண்ட நிலப்பரப்பை விட அதிகமான நிலம் கொழும்பு, துறைமுகநகர் உருவாக்கப்பட்டதால் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக நிலப்பரப்பு அழிந்து போயுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன் துறைமுக நகர் திட்டத்தை உருவாக்கியதாக மார்தட்டிக்கொள்ளும் ராஜபக்ஷ- ரணில் இருவரும் இந்த அழிவு குறித்த பொறுப்பை ஏற்றுகொள்ள தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இலங்கை இப்பொது வரையில் சீனாவுடன் தாய்லாந்துடன் உடன்படிக்கை செய்துள்ளனர். சிங்கபூருடன் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ளவுள்ளது, இந்தியாவுடன் உடன்படிக்கை செய்துகொள்ளவும் தயாராகி வருகின்றது. இந்த உடன்படிக்கைகளில் இலங்கையின் கோரிக்கைக்கு அமைய இலங்கைக்கு ஏதுவான உடன்படிக்கை ஏதாவது ஒன்றாவது செய்துகொள்ளப்பட்டுள்ளதா? பொருளாதார ரீதியில் எமக்கு சாதகமான தன்மைகள் உள்ளதாக ஏதாவது ஒரு உடன்படிக்கை உள்ளதா? அவ்வாறு எந்தவொரு உடன்படிக்கையும் எமக்கு தேவையான வகையில் உருவாக்கப்படுவதில்லை. 

ஆகவே முதலில் எமக்கு ஆரோக்கியமானதும் சாதகமானதுமான உடன்படிக்கைகளை செய்துகொள்ளுங்கள் என அவர் வலியுறுத்தினார்.