(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் பிறகு கலந்தாலோசிக்கலாம். அதற்கு முன்னர் எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தலில் கவனம் செலுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவு விஜயத்தின் போதும்  அவதானத்தில் கொண்டிருந்தார். மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் அங்கிருந்தவாறே தொடர்பு கொண்டிருந்தார். நாடு திரும்பியவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பென்தர மற்றும் எல்பிடிய தொகுதி அமைப்பாளர் அமைச்சல் கயந்த கருணாதிலகவுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபிர் ஹசிம் , கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இன்று அலரி மாளிகையில் எல்பிட்டிய தேர்தல் குறித்து கலந்துரையாடினர். 

தன் போதே மேற்கண்டவாறு பிரதமர் ரணில் விக்பிரமசிங்க ஆலோசனை வழங்கினார்.