கிண்ணியா காக்கா முனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் காதலித்தவரை கரம் பிடிக்கவில்லை என மனமுடைந்த நிலையில்  தூக்கில் தொங்கி  தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று நேற்று  (04) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

தம்பலகாமம் புளியடி பகுதியைச் சேர்ந்த எம்.எச்.ஜெஸ்மீனா (வயது 19) எனும் இளம் யுவதியே இவ்வாறு  தூக்கில் தொங்கி உயிரிழந்தவராவர்.

இவர் தம்பலகாமம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் , இதனால் இவரை காக்காமுனையில் உள்ள  சகோதரியின் வீட்டில் வைத்துள்ளனர்.

இவருக்கு தந்தை இல்லை , தாயார் வெளி நாட்டில் பணிப் பெண்ணாக  பணி புரிவதாகவும் , இவரது தாயார் வெளி நாட்டிலிருந்து வந்ததும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள்  உறுதியளித்துள்ள நிலையில் இந்த யுவதி மனமுடைந்து தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இவரது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் கொண்டு சென்று பின் மேலதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இது தொடர்பாக கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.