(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றத்தில் மாதம் முழுவதும் கடமையாற்றும் ஊழியர்களின் உணவு தேனீர் செலவுகளை மாதத்தில் எட்டு நாட்கள் மட்டுமே வரும் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது செலுத்தி எமது செலவாக ஊடகங்களில் காட்டாது உண்மையான செலவுகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை கொண்டுசெல்ல நாளாந்தம் இவ்வளவு பணம் செலவழிக்கப்படுகினது. இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது என ஊடகங்களில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டே வருகின்றது.
வரவு செலவு திட்டத்தை தவிர வேறு எந்த காலத்திலும் இந்த பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் இங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் உண்பதில்லை. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு மந்திரிக்கு இவ்வளவு செலவாகின்றது என ஒரு இலக்கத்தை கூறுகின்றனர். ஒரு மாதத்தில் எமக்குள்ள எட்டு நாட்களில் நான்கு நாட்களில் மட்டுமே காலை ஆகாரம் எடுக்க முடியும், மற்றைய நாட்களில் பகல் ஆகரம் மட்டுமே நாம் எடுத்துக்கொள்கின்றோம்.
ஆனால் பாராளுமன்ற சேவையாட்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உணவும் தேநீர் வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த அணைத்து செலவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கணக்கில் தான் பதியப்பட்டு செயற்பட்டு வருகின்றது. ஆகவே இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இல்லையேல் மக்கள் நினைத்துக்கொண்டிருப்பதை போல பாராளுமன்றத்திற்கு வரும் 225 பேருக்கும் இத்தனை ரூபாய்கள் செலவா என்ற கேள்வி எழும். நாம் ஒரு வேலை உணவை எடுத்தாளும் எமக்கு வரும் கணக்கில் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் உண்ணும் உணவுக்கான பணத்தை எமது 225 பேரில் பிரித்து காட்டுகின்றமை ஆரோகியமான விடையம் அல்ல.
ஆகவே இது குறித்து மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM