அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்றைய ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் ஸ்டம்ப் மீது பெய்ல்ஸ் இல்லாமல் ஆட்டம் நடந்தேறியுள்ளது.

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்றைய தினம் மான்சாஸ்டரில் ஆரம்பானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலாவதாக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணியானது முதலாம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸிக்காக 3 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை குவித்துள்ளது

நேற்றைய ஆட்ட நேரத்தின் போது போட்டியானது இரண்டு தடவைகள் மழையால் பாதிக்கப்பட்டது.

அத்துடன் 32 ஆவது ஓவரின் போது பலத்த காற்று வீச ஸ்டம்ப் மீது இருந்த பெய்ல்ஸ் அடிக்கடி கீழே விழுந்தது, இதனால் நடுவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய ஸ்டம்ப் மீது பெய்ல்ஸ் இல்லாமல் சிறிது நேரம் ஆட்டம் நடந்தேறியது.

எனினும் ஐ.சி.சி. விதிகளுக்கு இது முரணான காரணத்தினால் பின்னர் இந்த விதிமுறை நீக்கப்பட்டது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இவ்வாறு ஸ்ட்ம்ப் மீது பெய்ல்ஸ் இல்லாமல் போட்டி நடந்தேறியமை இது இரண்டாவது சந்தர்ப்பமாகும். 

இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கிடையே இடம்பெற்ற போட்டியிலும், பலத்த காற்று வீச, ஸ்டம்ப் மீது பெய்ல்ஸ் இல்லாமல் போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.