கோத்தாபய ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவது நடவடிக்கையாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமுமான வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.

வவுனியா விருந்தினர் விடுதி ஓன்றில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் மூலம் இந்த நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையை நாங்கள் நிறைவேற்ற வேண்டும். இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற கோத்தாபய ராஜபக்ஷவை ஏன் ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்கின்ற கேள்வியைப் பொறுத்தவரையில், கோத்தாபய ராஜபக்சவினுடைய கடந்த காலம் பற்றிய விவாதங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதிநிதியாக கோத்தாபயவை நியமித்து இருக்கிறார். அவர் இந்த நாட்டினுடைய முன்னேற்றங்களில் அவர் ஆற்றலுடன் செயற்படுவார் என நாங்கள் நம்புவதை இந்த நாட்டில் உள்ள அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள். அவ்வாறான ஒரு நம்பிக்கைக்குரிய ஒருவர் தான் கோத்தாபய என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. அதேபோல் இந்த நாட்டில் உள்ள மக்கள் அன்றாட தேவைகள் குறித்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயங்களுக்கு ஒரு ஆற்றலுடன் செயலாற்றக் கூடியவர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் அவரது கட்சியினரும் என்று நாம் கருதி ஆதரவளிக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தென்பகுதியை விட அபிவிருத்தி விடயத்தில் பல்வேறு பொருளாதார சமூகப் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளார்கள். 30 வருடம் நடந்த யுத்தினால் ஏற்பட்ட அழிவுகள், சிதைவுகளிலிருந்து அவர்கள் இன்னும் மீளாதவர்களாக காணப்படுகின்றனர். அந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு புதியதோர் உலகமாக மாற்ற அவை இன்னும் பூரணமாக்கப்படாத நிலை காணப்படுகின்நறது. இந்த விடயங்களை நாங்கள் நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்தவகையில் பொருளாதார ரீதியாக ஆற்றல் உள்ளவர்களை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும். 

குறிப்பாக தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருககிறார்கள். இப்பொழுதும் பல ஏமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். பல்வேறு வகையில் விரக்திகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். இந்த நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர் சமூதாயத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, தமிழ் சமுதாயம் முன்னேறும் வகையான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்துட வகையான விடயங்களை நாங்கள் பார்க்க வேண்டியவர்களாகவுள்டளேம். இவற்றுக்கு அரசியல் ரீதியாக அரசாங்டகளில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். கடந்த 5 வருடங்களாக நடத்தி வந்த ஆட்சியாளர்கள் நல்லாட்சி என்ற பெயரில் தொடங்கினார்கள். பின்னா நல்லாட்சி இல்லாதமல் போய் அது பின்னர் கூட்டாச்சி ஆகியது. பின்னர் அந்த நிலைமையும் மதாறி போய் கெட்ட ஆட்சி என்ற நிலையை அடைந்திருக்கிறது.

ஒன்றையும் செய்யவில்லை என்பதற்கு அப்பால் பல பாதகமான விடயங்களை ஐக்கிய தேசிய கட்சி செய்துள்ளது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணைபோயுள்ளது.  இந்த நிலையை மாற்ற வேண்டும். அரச அதிகாரத்தில் மாற்றம் வேண்டும். அதற்கான மாற்றத்தை அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தொடக்கி வைக்க வேண்டும். கோத்தாபயவின் கடந்த காலம் இருக்கட்டும். இனி அவர் ஜனாதிபதியாக வருகின்ற போது அதிகாரம் அற்ற ஜனாதிபதியாகவே வருவார். 

19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் அல் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அண்மையில் தெரிவித்துள்ளார். இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதி தேர்தல் பிரதானமானது. அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலை இது தான் நிர்ணயிக்கப் போகிறது. அந்தவகையில் அடுத்து வரும் ஆட்சியானது ஆற்றலுடைய, மக்களுக்கான,  அபிவிருத்தி, அரசியல் உரிமை, ஜனநாயக உரிமை தொடர்பான விடயங்களை முன்னகர்த்தி கொண்டு செல்லக் கூடிய ஆட்சியாக மாற்ற வேண்டிய தேவையுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை நம்பினால் தொடர்ந்தும் ஏமாளிகளாக இருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியை நம்பச் சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றி வருகிறது. 4 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சியை தலையில் தூக்கி வைத்து ஆடிய அவர்கள்  இப்பொழுது ஏமாற்றி விட்டதாக சொல்லுகிறார்கள். இதனையே நாங்கள் 4 வருடத்திற்கு முன்னரே திரும்ப திரும்ப சொன்னோம். ஆனால் கூட்டாக இருந்து அனுபவிக்க வேண்டிய எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு தற்போது தேர்தல் வருகின்ற நிலையிலேயே ஏமாற்றி விட்டதாக கூறுகிறார்கள். ஆனாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அதே ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரிக்கப் போகிறார்கள். பிசாசை கொண்டு வரக் கூடாது. பிசாசை விட பேயை கொண்டு வரலாம் என்கிறார்கள். ஆனால் மோசமான பேயை விட தெரிந்த பிசாசு பரவாயில்லை. இங்கு பேய்களும், பிசாசுகளும் தான் போட்டியிடப்போகின்றன. நல்லவரை தேடி கிடைக்கப் போவதில்லை. ஆகையால் தெரிந்த பிசாசு பரவாயில்லை. அதனால் நாம் கோத்தாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கப் போகின்றோம். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அடுத்து, பேரம் பேசி ஆதரவு வழங்குவது என்னும் போது தமிழ் மக்களில் மட்டும் தங்கியிருந்தால் பேரம் பேச முடியும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு கட்டாயம் தமிழ் மக்களின் ஆதரவு அவசியம். தமிழ் வாக்குகள் இன்றி அவர்களால் வெல்ல முடியாது. ஆனால் கோத்தாபய தென்னிலங்கையின் கதாநாயகன். அவர் அங்கு அதிகபடியான வாக்குகளைப் பெற்று வெல்வார். இருப்பினும் தமிழ் மக்களின் வாக்குகளையும் வழங்குவதன் மூலமே நாம் தேவையானவற்றை எமது மக்களுக்காக பெற முடியும். கோத்தாபய சொல்வதை செய்யக் கூடியவர். அதனால் புரிந்துணர்வு, நம்பிக்கை அடிப்படையில் ஆதரவு வழங்குகின்றோம். தமிழ் மக்களும் அங்கீகாரத்தை வழங்கும் போது மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அத்துடன், ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவது நடவடிக்கையாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக தெரிவித்துள்ளார்கள். படையினர் வசமுள்ள தனியார் காணிகள் உடனடியாக மக்களிடம் கையளிக்கப்படுவதுடன், அவசியமான இராணுவ முகாம்ங்கள் அரச காணிகளுக்கு மாற்றப்படும் எனவும் தெரிவைத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் இல்லை என்பது போராட்டத்தில் ஈடுபடுமவர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். 

அவர்களுக்கான இழப்பீட்டை சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் சர்வதேச விசாரணை என எதுவும் நடக்கப்போவதில்லை. அதனை இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் விரும்பாது. ஓரு நாட்டின் மீது வேறு நாடுகள் தலையிடுவதையோ, ஓரு நாட்டின் இராணுவத்திற்கு எதிராக செயற்படுவதையோ எந்த அரசாங்கமும் அனுமதிக்காது. எனவே ஓரு மாற்றத்தை நோக்கி பயணிக்க மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வோம் எனத் தெரிவித்தார்.