சிலந்தி மனிதன் (ஸ்பைடர்மேன்)  படங்­களில் வரு­வ­தை­யொத்த உப­க­ர­ண­மொன்றை அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார்  தப்­பி­யோடும் குற்ற­வா­ளி­களை தடுத்து நிறுத்திப் பிடிக்க விரைவில் பயன்­ப­டுத்­த­வுள்­ள­தாக  தகவல் வெளியா­கி­யுள்­ளது.

பொலாட்ரப் என்ற மேற்­படி உப­க­ர­ணத்தை அமெ­ரிக்­காவை அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­யங்கும் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான ட்ரப் டெக்­னோ­லொஜி  உரு­வாக்­கி யுள்­ளது. இந்த  உப­க­ர­ணத்தை இயக்கும் போது அந்த உப­க­ரணம் 3 மீற்றர் நீள­மான  இல­குவில் சேதப்­ப­டுத்த  முடி­யாத  கயிற்றை வெளிப்­ப­டுத்­து­கி­றது. அந்தக் கயிறு  ஓடும் குற்­ற­வா­ளி­களின்  கால்­களைச் சுற்றி அவரை தொடர்ந்து ஓட முடி­யாது தடுத்து நிறுத்­து­கி­ றது.

அத்­துடன் இந்­தக் கயிறு வலி எத­னையும் ஏற்­ப­டுத்­து­வ­தில்லை என்­பதால்  மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களது ஆதரவையும் பெறும் எனத் தெரிவிக்கப் படுகிறது.