ஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான யோகோஹாமாவில் ரயிலுடன் ட்ரக் ரக வானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விபத்தைத் தொடர்ந்து ரயில் பெட்டியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிந்த தீயணைப்பு பிரிவினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது ரயில் பெட்டியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், அதில் காயமடைந்த 30 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.