நான்கு சூத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஐ.தே.க.

Published By: R. Kalaichelvan

05 Sep, 2019 | 09:53 AM
image

ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பாளர் தெரிவு தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது நான்கு  சூத்­தி­ரங்கள் தொடர்பில்  ஆராய்ந்து வரு­வதாக   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்கள் மத்­தியில்  இந்த நான்கு  சூத்­தி­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்கள்  இடம்­பெற்று  வரு­கின்­றன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஆத­ர­வாக உள்ள  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்   ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  ரணில் விக்­கி­ர­ம­சிங்க   நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும்    பிர­த­ம­ருக்­கான வேட்­பா­ள­ராக  சஜித் பிரே­ம­தா­ஸவும்  கட்­சியின் தலை­வ­ரா­கவும் கூட்­ட­ணியின் தலை­வ­ரா­கவும்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க  தொடர்ந்­தி­ருக்­க­வேண்டும் என்றும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செய­லாளர் அகில  விராஜ் காரி­ய­வசம் உட்­பட பலரும் இந்த சூத்­தி­ரத்தை   முன்­வைத்­துள்­ளனர்.  

அமைச்­சர்­க­ளான கபீர் காசீம், மற்றும் மலிக் சம­ர­விக்­கி­ரம உட்­பட சில உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­ஸவும், பிர­தமர் வேட்­பா­ள­ராக  ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும்  கட்சி மற்றும் கூட்­ட­ணியின் தலை­வ­ராக கரு  ஜய­சூ­ரி­யவும் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும்   சூத்­தி­ரத்தை  முன்­வைத்­துள்­ளனர்.

 இதே­போன்றே  சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஆத­ர­வான   ஐ.தே.க. எம்.பி.க்கள்  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக   சஜித் பிரே­ம­தா­ஸவும் பிர­தமர் வேட்­பா­ள­ராக   கரு­ஜ­ய­சூ­ரி­யவும் கட்சி, மற்றும் கூட்­ட­ணியின் தலை­வ­ராக   ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று யோச­னையை முன்­வைத்­துள்­ளனர்.

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தலை­மையில் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக   ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும்  பிர­தமர் வேட்­பா­ள­ராக கரு ஜய­சூ­ரி­யவும்   சிரேஷ்ட அமைச்­ச­ராக  சஜித் பிரே­ம­தா­ஸவும்   கட்சி மற்றும்   கூட்­ட­ணியின் தலை­வ­ராக  ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும்  நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற சூத்­தி­ரத்தை  முன்­வைத்­துள்­ளனர்.

இந்த விட­யங்கள் தொடர்பில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் பின்னர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்  அமைச்­சர்கள்  ஆராய்ந்­துள்­ளனர்.

இந்த நிலையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கூட்­டுக்­கட்­சி­களின் தலை­வர்­களும்    ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றனர். இந்த நான்கு சூத்­தி­ரங்கள் தொடர்­பிலும் அவர்கள்   ஆராய்ந்­துள்­ளனர்.  ஆனாலும்   ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் தமக்குள்  ஒரு  முடிவை  எடுத்த பின்னர்   அந்த விடயம் தொடர்பில் தாம் இறுதி முடிவை எடுப்போம்  என்று  கூட்­டணிக் கட்­சி­களின் தலை­வர்கள்  தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ நாளை  வெள்ளிக்கிழமை கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை  சந்தித்து  கலந்துரையாடவுள்ளார்.  இதற்கான  அழைப்புக்கள்   விடுக்கப்பட்டுள்ளன.  இதனைவிட நாளை மறுதினம் 7ஆம் திகதி குருணாகலில்  சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக கூட்டமும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11