முகாமைத்துவத்துடன் தண்டப்பணத்தை சேர்த்தல் மற்றும் வாகன சாரதிகளுக்கு பாதகமான எச்சரிக்கையை குறிப்பிடும் புள்ளி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான ஒன்றிணைந்த இலத்திரனியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

போக்குவரத்து வாகன தவறு தொடர்பில் தரவுகள் மற்றும் தகவல்கள் முகாமைத்துவம் உடனடி தண்டப்பணம் சேகரித்தல் மற்றும் வாகன சாரதிக்கு பாதகமான எச்சரிக்கைப் புள்ளி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான ஒன்றிணைந்த இலத்திரனியல் தீர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரச தனியார் புரிந்துணர்வுக்கான தேசிய பிரதிநிதிகளின் கண்காணிப்பு மற்றும் பரிந்துரையை உள்ளடக்கிய அறிக்கையை நடைமுறைப்படுத்துதல் அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக மேற்கொள்ளப்படவேண்டிய சாத்தியக்கூறு மதிப்பீட்டின் படி பேராதெனிய பல்கலைக்கழகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக 22.2 மில்லியன் ரூபா (வட்டியற்ற) மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு அவர்களால் மேற்கொள்ளவதற்காக பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.