இந்தியாவில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பொஸ் சீசன்- 3 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பொஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசன் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாவும் அவர் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனமும் தொலைக்காட்சியும் தனக்கு நிறையக் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் இவர்கள் இனிமேலும் தன்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பக்கூடாது, விமர்சனம் செய்யக்கூடாது என மதுமிதா புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் தபால் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த நடிகை மதுமிதா, அங்கு சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து தன் கையை அறுத்துக்கொண்டார். இதையடுத்து அவர், பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த மதுமிதா, "பிக் பாஸ் வீட்டைவிட்டு நான் வெளியேறியதிலிருந்து நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். என் மீது தொலைக்காட்சி நிர்வாகம் பொய்யான புகாரை கொடுத்துள்ளது. இப்போது இதுகுறித்து விளக்கம் கேட்க அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தும் விஜய் டிவி நிர்வாகத்தை தொடர்புகொள்ள முடியவில்லை" என்றார்.

இந்நிகழ்ச்சியில்  இலங்கையில் இருந்து தர்ஷன் மற்றும் லொஸ்லியா ஆகிய இருவரும்  கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.