(இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்க் கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார  நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நாட்டு மக்கள் அரசியல் ரீதியில்  முறையான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.  எதிர்காலத்தில் ஏற்படகூடிய  நெருக்கடிகளை முன்கூட்டியே அறியும் அரசாங்க நிர்வாகமே காணப்படுகின்றது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேன தெரிவித்தார்.

நடப்பு அரசாங்க நிலவரம் எதிர்கால சட்ட விவரணங்களை தெளிவுப்படுத்தும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்  ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ  ராஜபக்ஷ எழுதிய நூல் வெளியிட்டு விழா இன்று பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் நடப்பு அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் எதிர்கால சட்ட செயற்பாடுகள் தொடர்பில்  மக்களுக்கு தெளிவுப்படுத்தும் விதமாக  நூல் வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.  இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்  நடைமுறையில் இடம் பெறுகின்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளமை நிச்சயம் நடந்தேறும்.  நாடு இன்று அரசியல் மற்றும்  பல சமூக பிரச்சினைகளை எதிர்க் கொண்டுள்ளது.

அரசியல் ரீதியில் பல மர்றுப்பட்ட கருத்துக்களும்  சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது.அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் சிறந்த தீர்மானத்தை விரைவாகவும், முறையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.