(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதியாக செயற்படும் சகல தகுதியும் உள்ளது எனத் தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் தலைமைகளின் ஆசீர்வாதம் இருக்கும் என நினைப்பதாகவும் கூறினர். 

பாராளுமன்றத்தில் இன்று மத்திய கலாசார நிதியம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்ட இக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசகுறித்து இவ்வாறு கூறினார்கள். 

இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றினை உருவாக்கவே நாம் முயற்சித்து வருகின்றோம், இதில் எமது பக்கமாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சி பக்கமாக இருந்தாலும் சரி புதிய தலைமை ஒன்றே அதிகாரத்தை கைப்பற்றி  இந்த நாட்டினை  பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.