கல்முனை விவகாரம் : அரசியல்வாதிகள் மக்களின் உரிமையுடன் விளையாடுகின்றனர் - ரன்முத்துகல தேரர் 

Published By: Digital Desk 4

04 Sep, 2019 | 12:14 PM
image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவதில் சில அரசியல்வாதிகள் சுயநலனுக்காக மக்கள் உரிமையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்க ரத்ன தேரர் தெரிவித்தார்.

கல்முனை உப பிரதேச செயலக பிரிவு தரமுயர்த்துவது ஏன் காலதாமதமாகின்றது என ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உரியமுறையில் தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம் இதில் எந்தவித அரசியல் நோக்கங்களும் இருக்கவில்லை மக்களுக்கான சேவைகள் சிறப்புடன் நடைபெற வேண்டும் அவர்கள் சுதந்திரமாக தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் இவற்றை வலியுறுத்தியே நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவதில் சில அரசியல்வாதிகள் சுயநலனுக்காக மக்கள் உரிமையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி பிரதமர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அனைவரும் ஒரே மேசையிலிருந்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் குறித்து பேசி தீர்க்கமான முடிவினை எட்டவேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் வரை நான் கல்முனை பிரதேச மக்களுடன் துணையாக இருப்பேன்.அவ்வாறு   தரம் உயர்த்தி கொடுக்காவிடில்  எந்த ஒரு அரசியல்வாதியும் என்னை சந்திக்க வர வேண்டாம்.

இங்கு சிறுபான்மை மக்களது பிரச்சினை தீர்க்கப்பட்டால் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தங்கள் போல் சண்டைகளும் இன முரண்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்களது பிரச்சினைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும்.

இலங்கை பல்லின சமூகம் கொண்ட ஒரு திருநாடு இங்கு  சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். சர்வதேச சக்திகள் நம்மை சிதைக்க பல வழிகளை கையாளுகின்றன என மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36