தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்குரிய நவீன சத்திர சிகிச்சை கூடம்

Published By: Digital Desk 4

04 Sep, 2019 | 11:56 AM
image

தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை கூடங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு  பாக்டீரியா தொற்று ஏற்பட்டால்... அது அவனுடைய உயிரிழப்புக்கு வழிவகுக்கும் . தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் 5% பேர் இது போன்ற பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே இதனை அகற்றுவதற்காக தற்பொழுது லேமினார்  ஃப்ளோ எனப்படும் கட்டமைப்புடன் கூடிய நவீன சத்திர சிகிச்சை கூடம் அமைக்கப்படுகிறது. 

லேமினார் ஃப்ளோவுடன் அமைக்கப்படும் சத்திரசிகிச்சை கூடங்களில், தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது. பிறரிடமிருந்து நோய்த்தொற்று ஏற்படாமல் அவர்களின் உயிரை காக்க முடியும். இத்தகைய கட்டமைப்புடன் கூடிய சத்திரசிகிச்சை கூடத்தை நிர்மாணிப்பதற்கு இந்திய மதிப்பில் மூன்று கோடி ரூபாய் செலவாகும் என்பதால் பெரும்பாலான மருத்துவமனைகளில் இவ்வசதி மேற்கொள்ளப்படுவதில்லை. 

ஆனால் பொதுவாக சத்திரசிகிச்சை கூடங்களில் குறிப்பிட்ட சில தீவிர சத்திரசிகிச்சை பிரிவுகளில் மட்டுமே லேமினார் ஃப்ளோவுடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய வசதிகள் அமைக்கப்பட்டிருக்கும் சத்திரசிகிச்சை கூடத்தில் காற்றில் பரவும் பாக்டீரியா கிருமிகளையும், தொற்றுகளையும் முழுமையாக வடிகட்ட இயலும். கிருமிகள் நிறைந்த சூழலை கூட சுகாதாரமாக மாற்றுவதற்கு இத்தகைய கட்டமைப்பு பயன்படுத்தப்படுகின்றன. 

இதனிடையே தெற்காசியா முழுவதும் தற்போது குறிப்பாக தீக்காயமடைந்தவர்களுக்காக சிகிச்சையளிக்கப்படும் சத்திர சிகிச்சை பிரிவு கூடத்தில் இத்தகைய லேமினார் ஃப்ளோ வசதி கொண்ட சத்திர சிகிச்சை கூட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவீதத்திற்கு மேல் காப்பாற்றப்படுகிறார்கள்.

டொக்டர் வசந்தாமணி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49
news-image

எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை...

2024-05-27 16:02:28
news-image

மெனிங்கியோமா எனும் மூளையில் வளரும் கட்டி...

2024-05-24 17:46:17
news-image

வயிற்றில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பிற்கு...

2024-05-23 16:37:56
news-image

இரத்த வாந்தி எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2024-05-22 15:58:35
news-image

மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-21 17:47:40
news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07
news-image

சுருள் சிரை நரம்பு பாதிப்பிற்கு நிவாரணம்...

2024-05-14 20:55:21