பிரக்ஸிட் முக்கிய வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தோல்வி ; தேர்தல் அறிவிப்புக்கு தயாராகும் பிரித்தானியா !

Published By: Digital Desk 3

04 Sep, 2019 | 11:09 AM
image

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்கை எது­வு­மின்றி வில­கு­வது,  அது குறித்து எதிர்ப்பைத் தெரி­வித்து வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால்  இன்று தோற்­க­டிக்­கப்­பட்டுள்ளது.­

பிரித்­தா­னியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வில­கு­வது தொடர்­பாக பாராளுமன்றில் நடந்த  வாக்­கெ­டுப்பில் ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்துள்ளது.

இந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத்தேர்தல் வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்திட வழிசெய்யும் மசோதாவை தான் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் நடப்பதற்குமுன் பிரெக்ஸிட் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 எம்பிக்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் முயற்சியை தோற்கடித்துள்ளனர்.

இந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எம்பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்கு தான் விரும்­ப­வில்லை என்ற போதும்  உடன்­ப­டிக்­கை­யின்றி பிரித்­தா­னியா வில­கு­வது தொடர்­பான வாக்­கெ­டுப்பில் அது குறித்து எதிர்ப்பைக் கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெற்றி பெற்றால் அவ்­வி­வ­கா­ரத்தில் முன்­னேற்ற நிலையை  எட்­டு­வது சாத்­தி­ய­மற்றுப் போய்­வி­டலாம் என்­பதால் தேர்­த­லொன்றை நடத்த வேண்­டிய நிர்ப்­பந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக  பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் கூறினார். 

டோரி கட்­சி­யி­லுள்ள எதிர்ப்­பா­ளர்கள்  தொழில் கட்­சி­யி­ன­ருடன் இணைந்து  எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 31 ஆம் திகதி பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்கை எது­வு­மின்றி வில­கு­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்றை கொண்டு வரும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர்.

அந்த சட்­ட­மூலம்   பிரித்­தா­னியா  ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான பிறிக்ஸிட் செயற்­கி­ர­மத்தை  எதிர்­வரும் ஆண்டு ஜன­வரி 31ஆம் திகதிவரை ஒத்­தி­வைக்க பிர­த­மரை நிர்ப்­பந்­திக்கும் வகையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56
news-image

பங்களாதேஷ் தேர்தலை இரத்து செய்ய வேண்டும்...

2026-02-13 10:21:02
news-image

பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு...

2026-02-13 09:39:14
news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56