ஆப்­கா­னிஸ்­தானின் காபூல் நகரில் குடி­யி­ருப்பு பிர­தே­ச­மொன்றில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை பின்­னி­ரவு இடம்­பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி குறைந்­தது 16 பேர் பலி­யா­ன­துடன்  100 பேருக்கும் அதி­க­மானோர்  காய­ம­டைந்­துள்­ளனர்.

அமெ­ரிக்க விசேட தூதுவர் சல்மே காலிஸாத்  தலி­பான்­க­ளு­ட­னான  சமா­தான உடன்­ப­டிக்­கை­யொன்றை எட்­டு­வதை ஊக்­கு­விக்கும் முக­மாக  காபூல் நக­ருக்கு விஜயம் செய்­துள்ள நிலை­யி­லேயே  இந்தக் குண்டு வெடிப்பு சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. 

தாக்­குதல் நடத்­தப்­பட்ட சமயம் ஆப்­கா­னிஸ்­தானின் பிர­தான தொலைக்­காட்சி சேவை­யான தோலோ நியூஸில் சல்மே காலி­ஸா­த்தின் பேட்டி  ஒளிப­ரப்­பப்­பட்டுக் கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.  

பெரு­ம­ளவு வீடுகள், உதவி முகவர் நிலை­யங்கள் மற்றும்  சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் கட்­டி­டங்கள் பலவும் அமைந்­துள்ள  கிறீன் விலேஜ் பிராந்­தி­யத்தில் சுவ­ரொன்றின் அருகில்  நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட டிரக்டர் வண்­டி­யொன்றை பயன்­ப­டுத்தி இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

குண்டு வெடிப்­பை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து துப்­பாக்கி வேட்டுச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்­த­தா­கவும்  அரு­கி­லுள்ள பெற்றோல் நிலை­ய­மொன்று எரிந்­ததால் வான­ளாவு புகை­மூட்டம்  எழுந்­த­தா­கவும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்தத் தாக்­கு­த­லுக்கு தலிபான் தீவி­ர­வா­திகள் உரி­மை­கோ­ரி­யுள்­ளனர். தமது குழுவைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரியொருவரும்  துப்பாக்கிதாரிகளும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றதாக தலிபான் பேச்சாளர் நஸ்ரத் முஜாஹித் தெரிவித்தார்.

இடி­பா­டு­களுக்குள் சிக்­கி­யவர்களை கண்­ட­றிய உதவும் உப­க­ரணம் இந்­தோ­னே­சி­யாவைச் சேர்ந்த  பல்­க­லைக்­கழக மாண­வர்கள்  மூவர் பூமி அதிர்ச்­சியின்போது  இடி­பா­டு­களின் கீழ் உயி­ருடன் சிக்­கி­யுள்­ள­வர்­களைக் கண்­ட­றிய உதவக்கூடிய கட­னட்டை அள­வான  சிறிய உப­க­ர­ண­மொன்றை உரு­வாக்கி சாதனை படைத்­துள்­ளனர்.  

டியற்­ரெ­றியன்ஸ் என்ற  இந்த உப­க­ரணம்  பூமி­ய­திர்ச்­சியின் போது தரையின் கீழ் 10 கிலோ­மீற்­ற­ருக்கும் அதி­க­மான ஆழத்தில் புதை­யுண்ட  ஒரு­வ­ரிடம் மூச்சு விடுதல் உள்­ள­டங்­க­லாக  மிகவும் சிறிய அசை­வுகள் காணப்­படும் பட்­சத்தில்  ஊதா நிற ஒளியை  வெளிப்படுத்தி அது தொடர்பில் மீட்புப் பணியாளர்களை எச்சரிக்கும் வல்லமையைக் கொண்டது என இந்த ஆய்வில் பங்கேற்ற மாணவரான சட்றியோ விரதினட்டா றியடி போயர் (23 வயது) தெரிவித்தார்.