நான் அரசியலுக்குள் பிரவேசிக்கிறேன் என சமூக வலைத்தளங்களில் உலா வரும் செய்திகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குமார் சங்கக்கார, 

சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் நான் அரசியலுக்குள் பிரவேசிக்கிறேன் என்பதாக புகைப்படங்கள் உலா வருகின்றன. இதை நான் முற்றாக மறுக்கிறேன். இதில் எந்த உண்மைத் தன்மையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

குமார் சங்கக்கார அரசியலுக்கு வருகிறார் என்று இதற்கு முன்னர் பலமுறை இப்படியான செய்திகள் வெளிவந்தன. அப்படி வரும் ஒவ்வொரு முறையும் அதற்கு விளக்கம் கொடுத்து தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று ஆணித்தரமாக சங்கக்கார தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.