இஸ்லாமிய இளைஞனாக விஷ்ணு விஷால்

Published By: Daya

04 Sep, 2019 | 09:16 AM
image

நடிகர் விஷ்ணு விஷால் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் எஃப் ஐ ஆர் ( ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்)என்ற படத்தில் இஸ்லாமிய இளைஞனாக நடிக்கிறார்.

‘ராட்சசன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் திரைப்படம் எஃப் ஐ ஆர்.  ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் என பெயரிடப்பட்ட இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகைகள் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், மோனிகா ரெபா ஜோன் என மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். சுஜாதா என்டர்டைன்மென்ட் சார்பில் ஆனந்த் ஜோய் தயாரிக்கிறார்.

படத்தைப்பற்றி விஷ்ணு விஷால் தெரிவிக்கையில்,

“ இந்த படத்தில் நான் நடுத்தரவர்க்கச் சார்ந்த படித்த இஸ்லாமிய இளைஞனாக நடிக்கிறேன். நன்கு படித்த இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து சந்திக்கும் சம்பவங்களால் அவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை திரைக்கதை விவரிக்கிறது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருந்தாலும், கொமர்ஷல் அம்சங்களும் இணைக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 11ஆம் திகதி முதல் சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற இருப்பதாக இயக்குனர் மனு ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இவர் கௌதம் வாசுதேவ்வின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ‘ஜெகஜால கில்லாடி’ விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right