(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய அரசியல் அமைப்பை தடுக்க ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே காரணமாகும்.

அரசியல் அமைப்பு பரிந்துரைகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே முரண்பாட்டுக் கருத்துக்களை முன்வைத்தனர் என கூறிய கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன எம்.பி  இப்போது ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்க முன்வந்துள்ள வேட்பாளர்கள் அனைவரும்  19 ஆம் திருத்தம் மற்றும் இந்த திருத்தத்தில் திரும்பவும் மேற்கொள்ளவுள்ளதாக கூறும்  அரசியல் அமைப்பு சபை முறைமையை தொடர்ந்து தக்கவைப்பீர்களா? அல்லது நீக்குவீர்களா? என்பதை நாட்டு மக்களுக்கு கூறுங்கள் எனவும் கோரிக்கை விடுத்தார். 

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நீதித்துறை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் கூறியதானது,

நீதித்துறை பொறிமுறையை பாதுகாக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

நீதிபதிகள் பல சந்தர்பங்களில் ஊமைகலாக்கப்படுகின்றனர். பலர் வழக்குகள் எழுதாது இருப்பதாக பொதுவான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. 

இதில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். அதேபோல் தகுதிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். சிரேஷ்ட தன்மை உள்ளதா என்பதை அறிய ஏதேனும்  பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.