வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் நாடு தழுவிய போராட்டத்திற்கு  முஸ்தீபு  

Published By: Vishnu

03 Sep, 2019 | 04:51 PM
image

(ஆர்.விதுஷா)

நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு பூராகவும் 54 ஆயிரத்திற்கும் அதிகமான வேலையில்லா ப் பட்டதாரிகள்  இருக்கின்றனர். அவர்களுக்கு  நியமனங்களை  வழங்குமாறு கோரி கடந்த 2 வருடங்களுக்கு அதிகமாக  போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.  

அதன் விளைவாக 16,800  பட்டதாரிகளுக்கு  நியமனங்களை  வழங்குவதாக அரசாங்கம் அறிவித்ததுடன் அவர்களில்  முதற்கட்டமாக 12, 133 பேருக்கு  நியமனங்கள்  வழங்கப்பட்டன. 

இந்த நியமனங்களின்  போதும் பட்டதாரிகள்  உள்வாரி  வெளிவாரி என  பிரிக்கப்பட்டமையினால்  குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.  இதன்  போது  அதிகளவில்  உள்வாரிப்பட்டதாரிகளுக்கே  நியமனங்கள்  வழங்கப்பட்டிருந்தன.  

ஆகவே, பட்டதாரிகளை அவ்வாறு  பாகுபடுத்தாமல்   அனைவருக்கும் நியமனங்கள்  முறையாக  வழங்கப்பட்ட  வேண்டும்.  

தற்போது  4,661  பட்டதாரிகளுக்கு  இரண்டாம் கட்ட நியமனங்கள்     எதிர்வரும் 16 ஆம்  திகதி  வழங்கப்படவுள்ளது. ஆகவே, அரசாங்கம்  உறுதியளித்ததைப்போன்று 16,800  பட்டதாரிகளுக்கும்  உகந்த வித்தில்  நியமனங்களை  வழங்க வேண்டும். அதேபோல் மேலும் 10 ஆயிரம்  பட்டதாரிகளுக்கும்  நியமனங்களை வழங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. 

ஆகவே , இந்த  நடவடிக்கைகள்  உரிய  வகையில்  நடைபெறவேண்டும். என்பதுடன்,  அனைத்து  பட்டதாரிகளுக்கும்  வேலை வாய்ப்பை  பெற்றுக்கொடுக்க  அரசாங்கம்  நடவடிக்கை  எடுக்க வேண்டும். அவ்வாறு  வழங்கப்படாவிடின்  நாடுதழுவிய  ரீதியில்  எதிர்ப்பு நடவடிக்கைகளை  முன்னெடுக்கவுள்ளதாக  ஒன்றிணைந்த  வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்  எச்சரிக்கை  விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரயாற்றும்போதே சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  தன்னே  ஞானானந்த  தேரர் மேற்கண்டவாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12
news-image

தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர்...

2024-10-05 15:46:39
news-image

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர்...

2024-10-05 15:18:19