செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2019ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் நிகர வருமானமாக 14.7 பில்லியன் ரூபாவை பதிவுசெய்தது. இதுரூபவ் கடந்தாண்டின் முதல் 6 மாதங்களோடு ஒப்பிடும் போது 10.55 சதவீத உயர்வாகும். முதலீடுகள் காரணமாகக் குறிப்பிடத்தக்க ரூடவ்ட்டங்கள், காப்புறுதி வருமானங்களில் பதிவான ஓரளவு வளர்ச்சி காரணமாக இந்த அடைவுகள் பெறப்பட்டன.

சந்தையின் முன்னணி நிறுவனமாக தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாகவும் செலிங்கோ லைஃப் காணப்படும் நிலையில், ஜூன் 30, 2019 உடன் நிறைவடைந்த 6 மாதங்களில் நிறுவனத்தின் காப்புறுதி வருமானமானது 5.72 சதவீதத்தால் முன்னேற்றமடைந்து 8.8 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதோடு, குறிப்பிட்ட காலப்பகுதிக்கான முதலீட்டு வருமானமானது 16.1 சதவீதத்தால் உயர்வடைந்து 5.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

வரிக்கு முன்னரான இலாபம் 13.55 சதவீதம் என்ற ஆரோக்கியமான அளவில் உயர்வடைந்து 3.8 பில்லியன் ரூபாபாயாகக் காணப்பட்டது. ஆனால், நிகர இலாபமானது 5.37 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 2.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. வருமான வரிச் செலவானது 2018ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களிலும் காணப்பட்ட 303 மில்லியன் ரூபாவிலிருந்து 2019ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கும் 918.4 மில்லியன் ரூபாவாக, மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்வடைந்தமையே இவ்வீழ்ச்சிக்கான பிரதானமான காரணமாக அமைந்தது என நிறுவனம் தெரிவித்தது. இந்த புதிய வரிச் சட்டமானது 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்திருந்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. துஷார ரணசிங்க, “அதிகரித்துள்ள வரி வீதமானது எமது இலாபத்தில் பெரியளவிலான தொகையை எடுத்துக் கொண்ட நிலையில், எமது பெறுபேறுகள் நிறுவனத்தால் பெறப்பட்டுள்ள திடமான செயற்பாட்டு அடைவுகளைக் காட்டுகின்றன. சந்தையானது மறையான சமிக்ஞைகளைக் காண்பிக்கின்ற நிலையில் இது பெறப்பட்டுள்ளது. செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் உட்பொதிந்த திறன், ஸ்திரத்தன்மை ஆகியன தொடர்பில் எமது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை காரணமாகவும் வணிகச் சூழலில் காணப்படும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் எமது வணிக அடிப்படைகளையும் அடிப்படையான விழுமியங்களையும் நாம் தொடர்ச்சியாக பின்பற்றுவதன் காரணமாகவுமே இந்த அடைவுகள் கிடைத்துள்ளன என்றார்.

டிசெம்பர் 31, 2018இல் காணப்பட்ட மொத்தச் சொத்துகள் 18.8 பில்லியன் ரூபாவால் அல்லது 15.9 சதவீதத்தால் அதிகரித்து, ஜூன் 30, 2019 இல் 136.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதுடன் நிறுவனத்தின் ஆயுள் நிதியம் 2.8 பில்லியன் ரூபாவால் அல்லது 3.2 சதவீதத்தால் கடந்த 6 மாதங்களில், உயர்வடைந்து 90.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

செலிங்கோ லைஃப் நிறுவனமானது காப்புறுதிக் கோரிக்கைகளுக்காக நிகரத் தொகையாக 5 பில்லியன் ரூபாவாக மீளாய்வு செய்யப்பட்ட முதல் 6 மாதங்களில் செலுத்தியிருந்தது. இது, 2018ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் செலுத்தப்பட்ட 4.5 பில்லியன் ரூபாவோடு ஒப்பிடும் போது 11.7 சதவீத அதிகரிப்பாகும்.

2018ஆம் ஆண்டின் முடிவில் செலிங்கோ லைஃ நிறுவனமானது, 118 பில்லியன் ரூபா சொத்துக்களையும் ஆயுள் நிதியமாக 88.05 பில்லியன் ரூபா, மற்றும் 103.74 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு நிதியத்தையும் கொண்டிருந்தது. அத்துடன், 2018ஆம் ஆண்டில், மொத்த வருமானமாக 28.7 பில்லியன் ரூபாவையும் சந்தா வருமானமாக 17.8 பில்லியன் ரூபாவையும் ஈட்டியிருந்தது.

இலங்கையின் மிகவும் பெறுமதியான ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான பிரான்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விருதை 2019ஆம் ஆண்டில் வென்ற செலிங்கோ லைஃப், இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான வேள்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விருதை, தொடர்ச்சியான 5ஆவது ஆண்டாகவும் 2018ஆம் ஆண்டு வென்றதோடு, SLIM-Nielsen நிறுவனத்தால் நாட்டின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாகரூபவ் தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாகத் தெரிவாகியுள்ளது.

செலிங்கோ லைஃப் செயற்பட்டுவரும் தனது 31 ஆண்டுகளில் கடந்த 15 ஆண்டுகளாக, நாட்டின் காப்புறுதித் துறையின் சந்தை முன்னோடியாகக் காணப்படுகிறது. செயற்படுநிலையிலுள்ள காப்புறுதிக் ஒப்பந்தங்கள் மூலமாக, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாழ்க்கைகளைக் காப்புறுதி செய்துள்ள நிறுவனம் புத்தாக்கம், உற்பத்தி ஆராய்ச்சியும் அபிவிருத்தியும், வாடிக்கையாளர் சேவை, தொழில்வாண்மை அபிவிருத்தி, கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் உள்நாட்டின் காப்புறுதித் துறையின் உயர்நிலை அளவுகோலாகக் கருதப்படுகிறது.