உலகின் உயரமான கட்டிடங்களை விடவும் பெரிய விண்கல் ஒன்று அடுத்தவாரம் பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விண்கல்லானது உலகின் மிக உயரமான கட்டிடமான டுபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா மற்றும் இரண்டாவது மிக உயரமான கட்டிடமான ஷாங்காய் கோபுரம் போன்றவற்றை விடவும் மிகவும்  உயரமானது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2,132 அடி விட்டத்தைக் கொண்ட "2000 QW7" என்ற விண்கல் ஒன்றே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பூமிக்கு அருகாமையில் கடந்து செல்லவுள்ளது.

தற்போது பூமியில் இருந்து சுமார் 33 லட்சம் கிலோ மீற்றர் தொலைவில் குறித்த விண்கல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.