(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலமாக  நியாயமாக  தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன் அதேபோல் தொல்பொருள் திணைக்கள சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துகிறேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச சபையில் வாக்குறுதி வழங்கினார். 

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தொல்பொருள் திணைக்களம் தொடர்பில் ஏற்கவனே எழுப்பியிருந்த கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

சட்ட விரோதமாக வன பாதுகாப்பு திணைக்கள பகுதியில் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் எனது அதிகாரங்களின் கீழ் வரவில்லை. எனினும் இது குறித்து நான் கவனம் செலுத்துகின்றோம்.

அதேபோல் தொல்பொருள் திணைக்களத்தின் மீது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வதாக நீங்கள் கூறிய காரணி மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும். இனவாத, மதவாதமாக செயற்படுகின்றனர் என கூறுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியோயாது. அதிகமானவர்கள் நடுநிலையாகவே செயற்பட்டு வருகின்றனர். நாம் இனவாத மதவாத அடிபடையில் சிந்திக்காது நடுநிலையாகவே செயற்பட்டு வருகின்றோம். 

எவ்வாறு இருப்பினும் உங்களின் பிரச்சினைகள் குறித்து முறையாக அதிகாரிகள் குழு முன்னிலையில் ஒப்படையுங்கள். உங்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை நியாயமாக  தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன். வடக்கு கிழக்கில் குறிப்பாக வடக்கின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்க்க நான் தயார் என்றார்.