(க.கிஷாந்தன்)

மலையகத்தில்  இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று  திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவம்தானத்துடன்  இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 மேலும் நுவரெலியா – அட்டன் பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.