டிஸ்கவரி தமிழ் என்ற தொலைக்காட்சியின் 'மென் வெர்சஸ் வைல்ட்' என்ற நிகழ்ச்சி மூலம் உலகமும் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். அசாதாரண சூழல்களிலிருந்து ஒருவர் எவ்வாறு உயிர் பிழைப்பது என்பது குறித்த இவரது நிகழ்ச்சி பலரையும் கவர்ந்த ஒன்றாகும்

இந்நிலையில் சமீபத்தில் இவர் இந்திய பிரதமர் மோடியுடன் காட்டுக்குள் சென்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் பியர் கிரில்ஸ் பங்கேற்கும் ’ட்ரெஷர் ஐலேண்ட்’ என்ற புதிய நிகழ்ச்சியின் படப்பிடிப்பு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு ஒன்றில் நடந்த போது பியர் கிரில்ஸ் கொடிய விஷத்தன்மை கொண்ட தேனீ ஒன்றால் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் விஷத்தன்மையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேனீயின் விஷத்தால் அவரது முகம் முழுவதும் வீங்கி அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. 

இதுகுறித்து அவருக்கு சிகிச்சையளித்து வரும் வைத்தியர்கள் கூறுகையில், "எந்த மோசமான சூழலையும் சமாளித்துவிடும் பியர் கிரில்ஸ் தேனீயால் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாகவுள்ளது. அத்தோடு தேனீ கொட்டியதும் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கி விட்டதாக தெரிவித்த அவர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்” என கூறியுள்ளார்.