முஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள தற்போதைய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் தலைவரும் பேருவளை நகர சபையின் முன்னாள் தலைவருமான மில்பர் கபூர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஐ.தே.க ஆட்சியில் போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.