(நா.தனுஜா)

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவது குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வை குழுவின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு, தமது மேற்பார்வை அறிக்கையை அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் நேற்று கையளித்திருக்கிறது.

இலங்கையின் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் பெற்ற தரவுகள் மற்றும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தயாரித்த சுருக்கமான அறிக்கைய ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வைக்குழு அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் கையளித்திருப்பதாக கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.