கேரளாவில் தொடரும் கன மழையால் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்யும் மழை காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் திருவனந்தபுரம் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஓகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடர்ந்து பெய்து வருகிறது.

இதன் காரணமாக மேற்குறிப்பிடப்பட்ட 8 மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை காரணமாகக் கடலிலும் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோர கிராமங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், வானிலை நிலையம் எச்சரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.