(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவுடன்  இணைந்தால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு  அரசியல் எதிர்காலம் உண்டு.

 

உத்தேச  ஜனாதிபதி  தேர்தலில் பொதுஜன  பெரமுனவிற்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலே போட்டித்தன்மை காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பலம் பெற வேண்டும். என்பதற்காக இரு தரப்பு பேச்சுவார்த்தை கட்டம்கட்டமாக இடம் பெறுகின்றது. எதிரணியின் தலைமைத்தவத்தின் கருத்திற்கு மதிப்பளித்து  எதிர்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்தார்.