(ஆர்.விதுஷா)

சவுதி  அரேபியாவிற்கு பணிப்பெண்னாக  சென்றிருந்த  எம்.டி. கங்கேஷ்வரி எனப்படும் மூன்று  பிள்ளைகளின் தாயார்  தொடர்பில் இது வரையில் எத்தகைய தகவல்களும் வெளியாகாத நிலையில் அவர்  தொடர்பிலான  தகவல்களை  தந்துதவுமாறு  வெளிநாட்டு  வேலைவாய்ப்பு  பணியகம் பொது  மக்கள்  உதவிய  நாடியுள்ளது.  

கங்ககேஷ்வரி  என்னும்  குறித்த  பெண்  கடந்த   2013 ஒக்டோபர்  30  ஆம்  திகதி  சவுதிக்கு தொழில் நிமித்தம்  சென்றுள்ளார்.  இந்நிலையில்  குறித்த  பெண் தொடர்பிலான  தகவல்கள்  எதுவும் கடந்த  2015  ஆம்  ஆண்டுவரையில்  கிடைக்கப்பெறவில்லை. 

ஆகவே, அவர் தொடர்பில்  தகவல் ஏதேனும்   கிடைக்கப்பெற்றிருப்பின் 0114374384-0112864112-0112880500  என்ற   தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு வெளிநாட்டு  வேலைவாய்ப்பு பணியகத்திற்கு  அறியத்தருமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.